தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் நடிகர் ரஜினிகாந்தை இன்று காலை சந்தித்தார்.
திருநாவுக்கரசரின் இளைய மகள் அம்ருதாவுக்கும் அதிமுக. முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா மகன், இசக்கி துரைக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் திருமணம் செப்டம்பர் 3-ம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து இன்று காலை திருநாவுக்கரசர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்றார். அங்கு தனது மகளின் திருமண அழைப்பிதழை ரஜினியிடம் கொடுத்தார். பின்னர் அங்கிருந்து திருநாவுக்கரசர் புறப்பட்டுச் சென்றார்.