பிரசாரத்தை நாளை மறுநாள் தொடங்குகிறார் ஸ்டாலின்

பிரசாரத்தை நாளை மறுநாள் தொடங்குகிறார் ஸ்டாலின்
பிரசாரத்தை நாளை மறுநாள்  தொடங்குகிறார் ஸ்டாலின்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாளை மறுதினம் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூரில் இருந்து, அவர் வாக்கு சேகரிப்பை தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவாரூரிலும், மாலை 5 மணிக்கு தஞ்சையிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். 

21ஆம் தேதி பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிலும் இந்தி‌ய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தரை ஆதரித்து முறிசியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அதற்கு மறுநாள், சேலம், தருமபுரி தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக ஏப்ரல் 2ஆம் தேதி பிரசாரம் செய்யவுள்ளார். முதற்கட்ட பிரசாரத்தின் இறுதியாக ஏப்ரல் 6ஆம் தேதி ஆரணி தொகுதியில் வாக்கு சேகரிக்க உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com