
டோக்கியோ ஒலிம்பிக் 57 கிலோ பிரீஸ்டைல் ஆடவர் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் ரவி குமார் தாஹியா. அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நூர் இஸ்லாம் சனயேவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார் அவர்.
விக்டரி பை ஃபால் முறையில் நூர் இஸ்லாமை வீழ்த்தியுள்ளார் அவர். இதுவரை இந்தியாவுக்கு வீராங்கனைகள் மட்டுமே பதக்கம் வென்ற நிலையில் முதல் முறையாக டோக்கியோவில் ஆண் வீரர் ஒருவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இறுதிப்போட்டியில் ஈரான் அல்லது ரஷ்ய வீரர்களுடன் விளையாட வாய்ப்பு உள்ளது.