
மக்களவைத் தேர்தலில் அமமுகவின் தோல்விக்கு முழு பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தினகரன், “ஹைட்ரோ கார்பனை எடுத்து டெல்டா மாவட்டத்தை சோமாலியாவாக மாற்ற நினைக்கிறார். செழிப்பான நாடாக இருந்த சோமாலியா நாடு அமெரிக்காவின் கைக்கூலியாக பொம்மை ஆட்சி நடந்து கொண்டிருந்த போது இதுபோன்ற நிலைமைக்கு ஆளானது.
தற்போது எம்எல்ஏக்கள் தயவினால்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, ஸ்டாலின் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் அவர்கள் எம்எல்ஏக்களே அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று அவருக்கே தெரியும்.
என்னைப் பொறுத்தவரை ஒரே கருத்துதான். நடந்து முடிந்த தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் சிலர் பணியாற்றாததால் தோல்வியடைந்ததா? அல்லது அவதாரங்களால் தோல்வி அடைந்ததா என்பது வரும் தேர்தலில் புரிந்துவிடும். தேர்தல் தோல்விக்கான காரணம் வெளிவரும். யாரும் சோர்வடைய தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.