
திமுக தலைவர் கருணாநிதி இல்லாமான கோபாலபுரத்துக்கு காவிரி மருத்துவமனையை சேர்ந்த 4 மருத்துவர்கள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்தனர். ஏற்கெனவே 2 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் கூடுதலாக 4 மருத்துவர்கள் வருகை இப்போது கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க வந்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நேற்று விளக்கம் அளித்தது. அதில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல் நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. வீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என்றும் காவேரி மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.