
திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுக தலைவர் கருணாநிதிக்கும் அவருக்கும் இடையே இருந்த உறவு குறித்தும் , ஏன் தொடர்ந்து கருணாநிதியோடு இருந்தார் என்பதையும் உணர்ச்சி பொங்க பேசினார்
“பொது வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்பதை எனக்கு திமுக தலைவர் கருணாநிதி கற்பித்தார் , சுய மரியாதையுடன் இருக்க வேண்டும் என்பார் , இவையே எம்.ஜி.ஆர். உடன் நான் நெருக்கமாக இருந்தாலும் திமுக தலைவர் கருணாநிதியை பிரியாமல் இருந்ததற்கு காரணம்” என்றார் துரைமுருகன்
தொடர்ந்து பேசிய துரைமுருகன் “திமுகவை வழிநடத்த மு.க.ஸ்டாலின் என்னும் ஆலவிழுதை திமுக தலைவர் கருணாநிதி விட்டுச்சென்றுள்ளார் ; பெரியார், அண்ணா, கருணாநிதியின் மூன்று இதயங்களை கொண்டவர் மு.க.ஸ்டாலின். இந்த மூன்று இதயங்களை வெல்ல தமிழகத்தில் ஒரு கொம்பனும் இல்லை” என்று பேசினார். கடைசியாக தலைவராக உள்ள செயல்தலைவரே என்று பேச்சை முடிக்கும் போது , அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது.