டிஜிட்டல் முறையில் நடைபெறும் 2021 கேம் டெவலெப்பர்ஸ் மாநாடு

டிஜிட்டல் முறையில் நடைபெறும் 2021 கேம் டெவலெப்பர்ஸ் மாநாடு
டிஜிட்டல் முறையில் நடைபெறும் 2021 கேம் டெவலெப்பர்ஸ் மாநாடு

வீடியோ கேம் டெவெலப்பர்ஸ்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் நிகழ்வுதான் கேம் டெவலெப்பர்ஸ் மாநாடு. நடப்பு ஆண்டுக்கான மாநாடு டிஜிட்டல் முறையில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நெட்வொர்க்கிங், கேம் ஷோக்கள் மற்றும் டெவெலப்பரஸ்களுக்கு என பயிற்சி பட்டறைகளும் இந்த நிகழ்வில் நடைபெறும். பெரும்பாலும் ஜெர்மனி, கனடா, சீனா, அமெரிக்கா மாதிரியான நாடுகளில்தான் இந்த மாநாடு நடைபெறும். கடந்த 2020-இல் இந்த மாநாடு விர்ச்சுவல் நிகழ்வாக நடைபெற்றிருந்தது. 

இந்த சூழலில் முதற்கட்டமாக வரும் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வெர்ச்சுவல் முறையில் பயிற்சி பட்டறையும், டெவெலப்பரஸ்களுக்கு பயிற்சியும் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கண்காட்சியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுளள்து. 

அதனையடுத்து வரும் ஜூலை மாதத்தில் எப்போதும்போல இந்த மாநாடு கலிபோர்னியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை வளர்க்கும் நோக்கில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இந்த மாநாட்டுக்கு இண்டிபெண்டெண்ட் கேம் டெவெலப்ர்ஸ்கள் செலவு செய்வது குறைந்துள்ளதாகவும் தெரிகிறது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com