”அதிமுக ஆட்சியில் எழுந்த புகாரில் இப்பொழுது தீவிரம் ஏன்?” - திடீர் ED Raid-ன் பின்னணி என்ன?
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் வீடு மற்றும் அவருடைய அலுவலகத்தில் இன்று காலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத் துறையினர் 3 மணிநேரம் சோதனை செய்தனர். சென்னை, கரூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனைக்கு திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் செந்தில்பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் ED Raid நடைபெறுவதற்கு என்ன காரணம்? அதுகுறித்த தொகுப்பை விளக்குகிறது இந்த வீடியோ.