தமிழ்நாடு
”என் கண்கள் கலங்கிவிட்டது” - மீட்டிங்கில் விஜய் பேசியது என்ன? பதிலளித்த மாவட்ட நிர்வாகிகள்!
சென்னையில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த விஜய், பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்... நிர்வாகிகளுடனான சந்திப்பில் நடந்தது என்ன, விஜய் என்ன பேசினார் என்பது குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
விஜய் என்ற ஒற்றை வார்த்தை தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது... ஹீரோவாக உச்சத்தில் இருக்கும் விஜய், சினிமாவைக் கடந்து செய்யும் செயல்கள் அனைத்தும் உற்றுநோக்கப்படுகிறது. அவ்வரிசையில், மற்றொரு முக்கிய நிகழ்வாக அமைந்திருக்கிறது. விஜய்யின் மக்கள் இயக்க நிர்வாகிகளுடனான சந்திப்பு, அண்மையில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவை நடத்தி முடித்த விஜய், அடுத்தகட்டமாக 234 தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார். அப்போது அவர்களிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
விஜய் ஆலோசனை நடத்தியது தொடர்பாக பேட்டியளித்த மாவட்ட நிர்வாகிகள், ”விஜய்யின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. விஜய் அரசியலுக்கு வந்தால் நல்லது நடக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.