சாதியை அடையாளப்படுத்தும் வகையிலான கயிறுகளை மாணவர்கள் கட்டக்கூடாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தனது பிறந்தநாளையொட்டி திருமாவளவன் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், மேலும், “பள்ளிக் குழந்தைகள் மற்றும் மழலைகளின் உள்ளங்களில் சாதி நஞ்சை விதைக்கக்கூடாது. அவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டும். ஜனநாயகத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இப்படிபட்ட சாதிய மதவாத அரசியல் தடுக்கப்பட வேண்டும்.
சாதியை அடையாளப்படுத்தும் வகையிலான கயிறுகளை மாணவர்கள் கட்டக்கூடாது என்ற தமிழக அரசின் அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. சாதிக் கயிறு விவகாரத்தை ஹெச்.ராஜா போன்றவர்கள் திசைதிருப்ப முயற்சி செய்கின்றனர்” எனத் தெரிவித்தார்.