விசிகவின் மது ஒழிப்பு மாநாடு: அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த திருமாவளவன் - காரணம் என்ன?

“விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம். சாதிய, மதவாத கட்சிகளை தாண்டி எல்லா கட்சிகளும் பங்கேற்கலாம்” என திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
Thirumavalavan, EPS
Thirumavalavan, EPSpt desk
Published on

செய்தியாளர்: ராஜ்குமார்

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... “அக்டோபர் 2ம் தேதி விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

Kallakurichi
Kallakurichipt desk

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 69 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து போது, அம்மக்கள் வைத்த கோரிக்கையெல்லாம் ‘மதுபானக் கடைகளை அரசு மூட வேண்டும், சாராய கடைகளை முற்றாக ஒழிக்க வேண்டும்’ என்பவைதான். ஆகவேதான் மதுவிலக்கு கோரி மாநாட்டை விசிக நடத்துகிறது.

Thirumavalavan, EPS
கிண்டி ரேஸ் கோர்ஸ்: வாடகை பாக்கி தொடர்பாக சீல் வைத்த வருவாய்த் துறை – நீதிமன்றம் புதிய உத்தரவு

மேலும் திமுக, அதிமுக மற்றும் இடசாரி கட்சிக்கும், விசிகவிற்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு. என்றாலும் ஆட்சியில் உள்ள அரசுக்கு மதுவிலக்கை அமல்படுத்துவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை. ராணுவத்தில் இருந்தால் மது அருந்தலாம், கேண்டீனில் மது வாங்கலாம் என்று இருக்கும் நிலை மாற வேண்டும்.

Thirumavalavan
Thirumavalavanpt desk

மதுவிலக்கை தேசிய கொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்த முன் வரும் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பை ஈடு செய்ய சிறப்பு நிதி வழங்க வேண்டும். மனித வளத்தை பாதிக்கக் கூடிய மது விற்பனையை அரசே செய்வது தேசத்திற்கு விரோதமான செயல். தேர்தல் அறிக்கையில் கூறிய மதுவிலக்கு கொள்கை திட்டத்தை திமுக அரசு உயிர்பிக்க வேண்டும். மதுவை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார்.

Thirumavalavan, EPS
திருச்சியில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு; ஜபில் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தொடர்ந்து, ‘மதுவுக்கு மாற்றாக கள்ளுக் கடையை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வலுக்கிறதே.. அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “கள்ளுக் கடை உள்ளிட்ட எந்த போதைப் பொருளும் கூடாது என்பதுதான் விசிக நிலைப்பாடு” என்றார்.

மேலும் பேசுகையில், “விசிக-வின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம். எல்லாம் கட்சிகளும் வரலாம். இந்த நிலைப்பாட்டை தேர்தல் அரசியலோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது” என்றார். மேலும் விரைவில் முதல் மாநில மாநாடு நடத்தும் விஜய்-க்கு வாழ்த்துகள் எனவும் திருமாவளவன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com