\
திரையரங்குகள் பார்க்கிங் கட்டணம்: அரசு நிர்ணயம்

திரையரங்குகள் பார்க்கிங் கட்டணம்: அரசு நிர்ணயம்

திரையரங்குகள் பார்க்கிங் கட்டணம்: அரசு நிர்ணயம்
Published on

திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. 

திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு முறையற்ற வகையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக நீண்ட காலமாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் திரையரங்குகளில் வானக நிறுத்தக் கட்டணத்தை அதிகபட்சமாக ரூ.20 ரூபாய் நிர்ணயித்து தமிழ‌க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சிகளில் கார் மற்றும் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர மோட்டார் வாகனங்களுக்கு 10 ரூபாயும் பார்க்கிங் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நகராட்சிப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் கார் மற்றும் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 15 ரூபாயும், இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 7 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகர, கிராம பஞ்சா‌யத்துகளில் உள்ள திரையரங்குகளில் கார் மற்றும் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 5 ரூபாயும், இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 3 ரூபாயும் ‌கட்டணமாக தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. எல்லாப் பகுதிகளிலும் மிதிவண்டிகளுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com