மாணவனை பள்ளியில் வைத்து பூட்டி சென்ற ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியை அடுத்த பிஎஸ் பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கலைவாணி. இவர் 4ஆம் வகுப்பு ஆசிரியையாக உள்ளார். இவர் வழக்கம் போல் பள்ளி முடிந்ததும் வகுப்பறையை பூட்டிவிட்டி சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அந்த வகுப்பில் இருந்து மாணவன் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் திருபுவனை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சுமார் 2மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவனை மீட்டனர். மாணவன் வேல்முருகன் இருந்தது தெரியாமல் கவனக்குறைவாக வகுப்பறையில் வைத்து பூட்டி விட்டு ஆசிரியை சென்று விட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியை இந்திரா, வகுப்பு ஆசிரியை கலைவாணி ஆகியோரை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை இயக்குனர் குமார் உத்தரவிட்டுள்ளார்.