
தமிழகத்தில் ஆவின் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலின் கொள்முதல் விலையையும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நகரவாசிகளின் பால் தேவையை தமிழக அரசின் ஆவின் பால் பெருமளவில் தீர்த்து வருகிறது. ஆனால் மாடுகளின் பராமரிப்பு செலவு கடுமையாக அதிகரித்துள்ளது எனவும் வைக்கோல் போன்ற மாட்டு தீவனங்களும் விலை உயர்ந்துள்ளதால் பசும்பால் மற்றும் எருமை பாலின் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி வந்தது.
இதுகுறித்து முதலமைச்சர் உடனான ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாகவும் வேலூர் தேர்தலுக்கு பிறகு பால் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆவின் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலின் கொள்முதல் விலையையும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தி ரூ.32 ஆகவும், எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தி 41 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை உயர்வு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.