ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், அனுமதி சீட்டை பெற்றுக் கொண்டு கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, வழிமறித்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி, 48 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், 6 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து இழுத்துச் சென்றனர். இதனால், கவலையில் ஆழ்ந்துள்ள மீனவர்கள், இந்த பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.