
‘எனக்கும் திருவள்ளுவருக்கும் பாஜக சாயம் பூசப்படுகிறது, நானும் சிக்க மாட்டேன், அவரும் சிக்க மாட்டார்’ என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ’திருவள்ளூவருக்கு காவி சாயம் பூசப்படுவது பற்றி கேட்கிறீர்கள். அவர் ஞானி, சித்தர். அவர் நாத்திகரல்ல, ஆத்திகர். கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஞானி, சித்தர்களை எந்த மதம், ஜாதிக்குள்ளும் அடைக்க முடியாது. பாஜக, அவங்க டிவிட்டர்ல தனிப்பட்ட முறையில அதுபற்றி போட்டாங்க. அது அவங்க விருப்பம். நாட்டில் இவ்வளவு பிரச்னை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு அதை, இவ்வளவு பெரிய விஷயமாக்கி, சர்ச்சையாக்கியது சில்லியாக இருக்கிறது.
என்னை, பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்தது பற்றி கேட்கிறீர்கள். தமிழக பாஜகவின் தலைவராக ஆகும் வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கிறார்கள். பாஜக சார்பில் எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை. எனக்கு, பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது. திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூசறாங்க. ஆனா நானும் அவரும் மாட்ட மாட்டோம். எனக்கு விருது கொடுத்திருப்பதற்கு நன்றி.’ என்றார்.