
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை பெய்தது.
சென்னையில் அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சைதாப்பேட்டை, அனகாபுதூர், விமானநிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 24மணி நேரத்திற்கு திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், தருமபுரி, சேலம், மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.