
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 9 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக மழையின் அளவு படிப்படியாக குறைந்து வந்தது. அவ்வவ்போது, சில இடங்களில் தூரலும், சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் அடையாறு, திருவான்மியூர், பெருங்குடி, நாவலூர், போரூர், சிட்லபாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல், மதுராந்தகம், வேதாரண்யம், தலைஞாயிறு, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை மாவட்டத்தில் 9 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் 13 பள்ளிக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.