
தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் நீட் தேர்வு அவசியமானது என தேமுதிகவை சேர்ந்த பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை போரூரில் மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா, தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் என கூறினார். அதிமுகவும், திமுகவும் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், தமிழகம் தற்போது சந்தித்து வரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் திமுகதான் என குற்றம்சாட்டினார்.
நீட் தேர்வினால் மாணவர்களுக்கு நன்மை விளையும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு பேசியுள்ளார்.