முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் பொன்முடி! இதுதான் காரணமா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக அமைச்சர் விளக்கமளித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று முன்தினம் அமலாகத்துறை சோதனையும், விசாரணையும் நடைபெற்றது. அதையடுத்து நேற்று இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்தினர். அது நேற்றிரவு 10.30 மணியளவில் முடிவுக்கு வந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி சந்தித்துள்ளார்.

cm stalin
cm stalinpt desk

முன்னதாக பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவுதான் சென்னை திரும்பினார். அக்கூட்டத்துக்கு செல்லும் முன், அமைச்சர் பொன்முடிக்கு தன் ஆதரவை தெரிவித்து சென்றிருந்தார் முதல்வர். போலவே நேற்று தொலைபேசி வழியாகவும் பேசியிருந்தார்.

அமைச்சர் பொன்முடி
“சட்ட ரீதியா, துணிச்சலா எதிர்கொள்ளுங்க”- அமைச்சர் பொன்முடிக்கு நம்பிக்கை கூறிய முதல்வர் ஸ்டாலின்!

இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக முதலமைச்சரிடம் அமைச்சர் விளக்கமளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com