அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களில் சட்ட விரோதமாக முதலீடு செய்த குற்றச்சாட்டு தொடர்பாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று
வருகிறது. இந்த வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கவும், விசாரணைக்கு தடை கோரியும் தினரகன் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார். டிடிவி தினகரனின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் தினகரன் மீதான அந்திய செலாவணி மோசடி வழக்கை
வருகிற 17-ஆம் தேதி வரை விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.