
கனமழை எதிரொலியால் நீலகிரி மாவட்டத்தின் 4 தாலுக்காக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் நேற்று நீலகிரியின் மூன்று தாலுக்காக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்திருந்தார். அதன்படி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகாகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படவில்லை.
இந்நிலையில் கனமழையின் தொடர்ச்சியால் 4 தாலுக்காக்களில் இன்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகாவில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.