
கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் இன்று தொடக்கம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழகத்தில் வாழும் எந்த சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது? சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரிடம் முதலமைச்சர் ஆவேச கேள்வி.
சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை. அமைதியான முறையில் இன்று போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் விவாதத்தில் பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு. அமைச்சர் பாண்டியராஜன் மீதான உரிமை மீறல் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு.
காவலர் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு. எழுத்து தேர்வில் தேர்வாகாத இருவர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றது புதிய தலைமுறை ஆய்வில் அம்பலம்.
சட்டவிரோத மென்பொருட்கள் மூலம் ரயில்களில் தட்கல் முன்பதிவில் ஈடுபட்ட 60 பேர் கைது. தவறு களையப்பட்டதால் இனி தட்கலில் கூடுதல் டிக்கெட்டுகள் கிடைக்கும் என ரயில்வே காவல் துறை தகவல்.