எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிpt

”ஆட்சியில் பங்கா? நாங்கள் ஒன்றும் ஏமாளி இல்லை..” - EPS அதிரடி பேச்சு

எடப்பாடி பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பாரான்னு எதிர்க்கட்சியினர் கேட்கிறார்கள். நாங்க ஏமாளி இல்லை. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்று அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Published on

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக
அதிமுக

அந்தவகையில் நேற்று நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் தொகுதிகளில் மக்களை சந்தித்த பின்னர், திருத்துறைப்பூண்டியிலும் மக்களை சந்தித்து பேசினார்.

சட்டை இல்லாமல் போவீங்க..

மக்கள் கூட்டத்தின் இடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, எடப்பாடியின் உறவினர் வீட்டில் நடந்த ரெய்டு காரணமாகத்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று திமுக அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். என் சம்பந்தி வீட்டில் ரெய்டே நடக்கவில்லை. என் உறவினர் வீட்டில் தான் நடந்தது. அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..?

நல்லா சிந்தியுங்க நேரு அவர்களே, சட்டமன்ற கூட்டத்தொடர் பாதியிலேயே போனீங்க, உங்க தம்பி, மகன் வீடுகளில்தான் ஐ.டி., அமலாக்கத்துறை ரெய்டுகள் நடந்தது. உங்க முதுகில் அழுக்கை வச்சிகிட்டு எங்களைப் பற்றி விமர்சனம் செய்ய என்ன அருகதை இருக்கிறது..?

அதிமுக
அதிமுக

நீங்க என்ன வேண்டுமானலும் பேசலாம், நாங்கள் தவறு செய்யவில்லை, பயமில்லை. அதிமுக 4 ஆண்டுகள் சிறந்த ஆட்சி கொடுத்தேன். எவ்வளவு பிரச்னையை உண்டாக்குனீங்க எனக்கு. பெரும்பான்மை நிரூபிக்கும்போது திமுக எம்.எல்.ஏக்கள் டான்ஸ் ஆடுனாங்க, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தாங்க, ரவுடிகள் ராஜ்ஜியம் நடந்தது. ஸ்டாலின் சட்டையை கிழித்து வீதியில் போனார். இது வரையிலும் 31 தொகுதிகளுக்குப் போயிருக்கேன், இந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமா இருக்கு. அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் அப்போ சட்டை வேட்டி இல்லாமல் போவீங்க” என விமர்சித்து பேசினார்.

பாஜகாவுக்கு ஆட்சியில் பங்கா? நாங்கள் ஒன்றும் ஏமாளி இல்லை!

பாஜக உடனான கூட்டணி குறித்து பேசிய இபிஎஸ், எடப்பாடி பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பாரான்னு எதிர்க்கட்சியினர் கேட்கிறார்கள். நாங்க ஏமாளி இல்லை. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும். கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும், இல்லை என்றால் இல்லை. எதைப்பத்தியும் கவலையில்லை. திமுகவை அகற்ற வேண்டும் என்ற கொள்கையில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணையணும். அதுதான் எங்கள் நிலைப்பாடு. திமுகவை அகற்றவேண்டும் என்று பாஜகவும் கருதுகிறது. இன்னும் சில கட்சிகள் சரியான நேரத்தில் வரும், மரண அடி குடுப்போம். 200 சீட் கனவுதான், நிஜத்தில் அதிமுகதான் 210 ல் ஜெயிக்கும்.

விலைவாசி உயர்வு, கட்டுமான பொருட்கள் உயர்வு, அதையெல்லாம் கம்யூனிஸ்ட் கேக்க மாட்டாங்க, அப்படி போராடினாலும் மத்திய அரசைக் கண்டித்து போராடுவாங்க, இங்க யார் ஆள்கிறது திமுக தானே? இங்கே இருக்கும் மக்கள் பிரச்னையை இங்குள்ள ஆட்சிதானே பார்க்கனும். எப்ப பார்த்தாலும் பாஜக மோசமான கட்சின்னு சொல்கிறார்கள். இப்ப என்ன தேர்தல்.? சட்டமன்றத் தேர்தல் தானே நடக்கப்போகிறது. இந்த முதல்வருக்கு அது கூட தெரியவில்லை, தமிழ்நாட்டுக்குத் தேர்தல் நடக்குது. நாங்க முடிவு செஞ்சு கூட்டணி அறிவிச்சாச்சு, எங்க கூட்டணிக்கு அதிமுக தலைமை, அதிமுக தான் ஆட்சி அமைக்கும். இதை மடைமாற்றம் செய்து மக்களை குழப்பி ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறார் ஸ்டாலின். பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம். ” என்று விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com