ராகுல் காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கத்தால் பிரதமர் மோடியின் கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என சிவகங்கையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
சிவகங்கையில் நடைபெற்ற மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ராகுல் காந்திக்கு இன்னும் மூன்று நாட்களில் பதவியை பெற்றுத் தருவோம். 24 மணி நேரத்தில் ராகுல் காந்தியின் பதவியை பறித்த பாராளுமன்ற சபாநாயகர், ஏன் நான்கு வருடங்களாக துணை சபாநாயகர் தேர்தலை நடத்தவில்லை.
இந்திய பாராளுமன்றத்தில் முதல் முறையாக நான்கு ஆண்டுகள் துணை சபாநாயகர் இல்லாமல் பாராளுமன்றம் நடந்து வருவதாக குற்றம் சாட்டிய அவர் மோடிக்கு கவுன்ட்டவுன் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.