
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வரும் 3 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில், இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். நேற்று கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட சென்னையின் சில பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.