தமிழ்நாடு
"சாதிய பதற்றங்கள் மிகவும் கவலை அளிக்கிறது" - ஆளுநர் ரவி
தமிழகத்தில் சமூகநீதி குறித்த விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கதைகள் இருப்பதாக
ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் முடித்த ஆளுநர் ஆர். என்.ரவி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அழுத்தத்தில் உள்ளபோதும் விவசாயிகள் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். தடைகளை எதிர்கொண்டபோதும் கைவினை
கலைஞர்கள் லட்சியமிக்கவர்களாக இருக்கிறார்கள்.
கிராமத்து இளைஞர்களுக்கு சரியான உந்துதலை வழங்கினால் ஆக்கப்பூர்வமானவர்களாக அவர்கள் திகழ முடியும் . மேலும் சாதிய பதற்றங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கதைகள் மிகவும் கவலை அளிக்கிறது. தமிழகத்தில் சமூகநீதி பற்றிய பிரமாண்ட விளம்பரங்களுக்கு முற்றிலும் மாறானவையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.