
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அதிமுக எம்எல்ஏவை தாக்கிய பாமகவைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம், போளூருரில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அப்போது பாமகவைச் சேர்ந்த வசந்தமணி என்பவர், எம்எல்ஏவின் காலில் விழுவது போன்று நடித்து அவரின் முகத்தில் கையால் குத்தியுள்ளார். இதையடுத்து தாக்குதல் நடத்திய நபரை போளூர் காவல்துறையினர் கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவல் வெளிவரவில்லை.
காயமடைந்த எம்எல்ஏ பன்னீர்செல்வம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடுதிரும்பினார். இதனிடையே எம்எல்ஏ பன்னீர்செல்வத்தின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் வசந்தமணி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.