“பாஜகவோடு இனி எப்போதும் கூட்டணி இல்லை”- அழுத்தம் திருத்தமாக கூறும் இபிஎஸ்; புதிய வியூகம்தான் காரணமா?
அதிமுகவின் 52ஆவது ஆண்டு விழாவை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் பேசிய அவர் , மாவட்ட செயலாளர்களுக்கு அஞ்சி, அவர்கள் சொல்படி நடப்பதை விட்டு, கட்சிக்காக, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தேர்தல் பொறுப்பாளர்களின் பணிகளையும் கட்சி தலைமை நிர்வாகிகள் கண்காணிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக உடனான கூட்டணி இல்லை என்பதை மீண்டும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளது தற்போதைய அரசியல் களத்திலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது குறித்து இன்றைய BIG STORY நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் சிவப்பிரியனிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. முழு காணொளியும் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.