
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளை அவிழ்த்துவிடுவதல் ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக் குத்து ஏற்பட்டது. இவர்கள் இருவரும் காயங்களுடன் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி இன்று காலை 8 மணியளவில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிடுவதில் போட்டி ஏற்பட்டு அது மோதலாக மாறியது.
காளைகளை அவிழ்த்துவிடுவதில் ஏற்பட்ட தகராறில் அருண்குமார் மற்றும் தெய்வேந்திரன் ஆகிய இருவருக்கும் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.