
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10,448 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 270 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 21,058 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை 23,88,746 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் சென்னையில் 689 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இணை நோய்கள் இல்லாத 64 பேர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 12 வயதுக்குட்பட்ட 386 சிறார்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.