சஞ்சு-சூர்யா வெறித்தனமான ஆட்டம்.. 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! 3-0 என தொடரை வென்றது!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது இந்தியா.
இந்தியா
இந்தியாcricinfo
Published on

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனைத்தொடர்ந்து டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது.

ind vs ban
ind vs bancricinfo

இந்நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிக்சர் மழை பொழிந்து 297 ரன்களை பதிவுசெய்து சாதனை படைத்தது.

இந்தியா
தொடர்ந்து பறந்த 5 சிக்சர்கள்; முதல் டி20 சதமடித்த சஞ்சு சாம்சன்! 297 ரன்கள் குவித்து இந்தியா சாதனை!

சஞ்சு சாம்சன் அதிரடி சதம்.. 297 ரன்கள் குவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்கவீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன், 9 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி வெறும் 40 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதில் ஒரு ஓவரில் 5 சிக்சர்கள் அடித்ததும் அடங்கும்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன் 111 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 75 ரன்கள், ஹர்திக் பாண்டியா 47 ரன்கள் என விளாச 20 ஓவர் முடிவில் 297 ரன்களை குவித்து சாதனை படைத்தது இந்தியா.

ரவி பிஸ்னோய்
ரவி பிஸ்னோய்

298 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே அடித்து 133 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிக பட்சமாக ரவிபிஸ்னோய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என கைப்பற்றி வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.

இந்தியா
“பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும்..” - நேரலையில் பொறுமை இழந்த ஷோயப் அக்தர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com