
இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. தம்புல்லாவில் நடைபெறும் இந்தப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் இரண்டரை மணியளவில் தொடங்குகிறது.
இதுபற்றி தம்புல்லாவில் பேட்டியளித்த இந்திய அணி கேப்டன் விராத் கோலி, 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டியை கருத்தில் கொண்டே அணியின் தேர்வு நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் வீரர்கள் களமிறக்கப்படுவார்கள். இப்படியான பரிசோதனை முயற்சியில் சில போட்டிகளை நாம் இழக்கவும் நேரிடலாம். விமர்சனங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். அதை பொருட்படுத்தாமல் ரிஸ்க் எடுக்க ரெடியாகி இருக்கிறோம். லோகேஷ் ராகுல் சிறந்த வீரர். அவரது காயத்துக்கு முன் மூன்று விதமான போட்டியிலும் அவர் நன்றாக ஆடியிருக்கிறார். அவர் நடு வரிசையில் களமிறங்குவார்’ என்றார்.