நம் கையில் எதுவும் இல்லை: மயங்க் அகர்வாலுக்கு கருண் நாயர் அட்வைஸ்!

நம் கையில் எதுவும் இல்லை: மயங்க் அகர்வாலுக்கு கருண் நாயர் அட்வைஸ்!
நம் கையில் எதுவும் இல்லை: மயங்க் அகர்வாலுக்கு கருண் நாயர் அட்வைஸ்!

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலுக்கு கிரிக்கெட் வீரர் கருண் நாயர் அட்வைஸ் செய்துள்ளார்.

2016-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்தவர், பெங்களூரைச் சேர்ந்த கருண் நாயர். வீரேந்திர சேவாக்கை அடுத்து முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றவர் இவர். அதற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.

மயங்க் அகர்வால்

இந்நிலையில் இவருடன் பெங்களூர் அணியில் விளையாடி வரும் மயங்க் அகர்வால், இந்த வருடம் அனைத்து வித முதல் தர போட்டியிலும் சேர்த்து 2141 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதையடுத்து இலங்கையில் நாளை தொடங்கும் முத்தரப்புத் தொடரில் இவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிடைக்கவில்லை. இதையடுத்து ஏமாற்றத்தில் உள்ள மயங்க் அகர்வாலுக்கு கருண் நாயர் அட்வைஸ் செய்துள்ளார்.

இதுபற்றி கருண் நாயர் கூறும்போது, ’மயங்கிடம் நான் சொன்னது இதைதான். உன் வேலை ரன்கள் குவித்துக் கொண்டிருப்பது மட்டுமே. அதில் கவனம் செலுத்திக்கொண்டே இரு. அதைதாண்டி நம் கையில் எதுவும் இல்லை. நமக்கான நேரம் வரும்போது கண்டிப்பாக அழைப்பார்கள். அதுவரை ரன்குவிப்பில் கவனம் செலுத்த சொல்லியிருக்கிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com