2021-இன் லாரஸ் விருதுக்கான ரேஸில் நீரஜ் சோப்ரா

2021-இன் லாரஸ் விருதுக்கான ரேஸில் நீரஜ் சோப்ரா
2021-இன் லாரஸ் விருதுக்கான ரேஸில் நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்திய நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுத்த நீரஜ் சோப்ரா 2021-இன் ‘Laureus World Sports Award for Breakthrough of the Year’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். விளையாட்டு உலகில் சிறப்புமிக்க விருதாக இது பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நொடியிலிருந்து அவருக்கு பாராட்டு, பரிசு மற்றும் விருதுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

24 வயதான அவர் சச்சின் மற்றும் வினேஷ் போகாத் ஆகியோரை தொடர்ந்து இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள மூன்றாவது இந்திய விளையாட்டு வீரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இதனை அவரே சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

“சிறப்புமிக்க இந்த விருதை வெல்ல எனது பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை எண்ணி சிறப்பாக உணர்கிறேன். விளையாட்டு உலகில் சிறந்து விளங்கும் மற்ற வீரர்களுடன் நானும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி” என நீரஜ் தெரிவித்துள்ளார். 

டென்னிஸ் விளையாட்டு வீரர் மெத்வதேவ், டென்னிஸ் வீராங்கனை எம்மா ரடுகானு, கால்பந்தாட்ட வீரர் Pedri González, தடகள வீராங்கனை யூலிமர் ரோஜாஸ், ஆஸ்திரேலிய நாட்டின் நீச்சல் வீராங்கனை அரியர்னே டிட்மஸ் ஆகியோர் இந்த விருதுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com