விக்கெட் வீழ்த்தி அதிரடியாக தொடங்கிய இந்தியா .. கிளாசிக் பேட்டிங்கால் அணியை மீட்கும் ரூட்

விக்கெட் வீழ்த்தி அதிரடியாக தொடங்கிய இந்தியா .. கிளாசிக் பேட்டிங்கால் அணியை மீட்கும் ரூட்
விக்கெட் வீழ்த்தி அதிரடியாக தொடங்கிய இந்தியா .. கிளாசிக் பேட்டிங்கால் அணியை மீட்கும் ரூட்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.  அதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணி இந்த ஆட்டத்தின் முதல் செஷனில் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே பும்ரா விக்கெட் வீழ்த்தினார். 

உணவு நேர இடைவேளைக்கு முன்பாக இரண்டு விக்கெட்டுகளை அள்ளியிருந்தனர் இந்திய பவுலர்கள். தொடர்ந்து உணவு இடைவேளைக்கு பிறகு மூன்றாவது விக்கெட்டையும் கைப்பற்றி இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டரை ஆட்டம் காண செய்தனர். 66 ரன்களை விட்டுக் கொடுத்து இங்கிலாந்தின் டாப் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்தியா.

ஷமி இரண்டு விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக கேப்டன் ரூட் விளையாடி வருகிறார். அவருக்கு பேர்ஸ்டோ கம்பெனி கொடுத்து வந்தார். நெருக்கடியான நேரத்திலும் தன்னுடைய கிளாசிக் பேட்டிங்கை வெளிப்படுத்திய ரூட் 89 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

சிறப்பாக தடுப்பாட்டம் விளையாடி வந்த பேர்ஸ்டோ 29 ரன்னில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 138 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கொஞ்சம் டைட் லைன் மற்றும் லெந்தில் வீசினால் இங்கிலாந்தை விரைவாக ஆல் அவுட் செய்யும் வாய்ப்பு கிட்டும். ஜோ ரூட், பேரிஸ்டோ ஜோடி 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com