‘இனி இந்த வாக்கிங் ஸ்டிக் எனக்கு தேவையில்லை’ - ரிஷப் பந்த் பகிர்ந்த ஹேப்பி வீடியோ!

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததால் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் ரிஷப் பந்த் விளையாடவில்லை. இருப்பினும் அவரது அணியை ஊக்கப்படுத்தும் விதமாக ஐபிஎல் போட்டிகளைக் காண நேரடியாக மைதானத்துக்கு ரிஷப் பந்த் சென்றார்.
Rishabh
RishabhTwitter

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்ந் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு தன் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியின்றி நடக்கிறார். முதலில் வாக்கிங் ஸ்டிக்குடன் நடக்கும் அவர், டக்கென அதை தூக்கிப்போட்டுவிட்டு, “இனிமேல் வாக்கிங் ஸ்டிக் தேவையில்லை” என சொல்கிறார்.

தன் சமூக வலைதளபக்கங்களில் இதை பகிர்ந்துள்ள பந்த், “ஊன்றுகோல்கள் இல்லாத மகிழ்ச்சியான நாள்!” எனப் பதிவிட்டுள்ளார் பந்த்.

முன்னதாக கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததால் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் ரிஷப் பந்த் விளையாடவில்லை. இருப்பினும் அவரது அணியை ஊக்கப்படுத்தும் விதமாக ஐபிஎல் போட்டிகளைக் காண நேரடியாக மைதானத்துக்கு சென்றிருந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com