கோலி WTC-க்கு முழு பலத்துடன் இருக்கிறார்! அவரது விக்கெட் பெரிய பரிசாக இருக்கும்!- ரிக்கி பாண்டிங்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பையை (டெஸ்ட் மேஸ்) ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார்.
ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங்டிவிட்டர்

2023ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இந்த மாதம் மே 28ஆம் தேதியோடு ஐபிஎல் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த 10 நாட்களில் நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் விளையாடுவதற்காக, இந்திய அணி இங்கிலாந்துக்கு பயணிக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா என்ற இருபெரும் அணிகள் பங்கேற்கும் இறுதிப்போட்டியானது, ஜூன் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பையை (டெஸ்ட் மேஸ்) ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார்.

ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங்டிவிட்டர்

ஐசிசியால் ஏற்பாடு செய்யப்பட்டு டெல்லியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் WTC பரிசுக்கோப்பையை வெளியிட்ட ரிக்கி பாண்டிங், உள்ளூர் அகாடமி குழந்தைகள் மற்றும் ஊடகங்களுடன் உரையாடினார். அப்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியை காண ஆவலாக இருப்பதாகக் கூறினார். ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஜஸ்பிரிட் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியில் இல்லையென்றாலும், இந்தியா வலுவான அணியாகவே இருப்பதாக தெரிவித்தார்.

விராட் கோலி தன்னுடைய முழுபலத்துடன் திரும்பியிருக்கிறார்!- ரிக்கி பாண்டிங்

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது விராட் கோலியுடன் பேசியது பற்றி கூறிய ரிக்கி பாண்டிங், விராட் தன்னுடைய சிறப்பான நிலைக்குத் திரும்பியுள்ளதாக நம்புகிறார் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசுகையில், “டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் விளையாடியபோது கோலியிடம் நிறைய உரையாட முடிந்தது. அவருடைய பேட்டிங் ஃபார்ம் மற்றும் அவரின் தற்போதைய மனநிலை மற்றும் வாழ்க்கை பற்றி நன்றாக உரையாடினோம். அப்போது அவர் தனது பெஸ்ட் ஃபார்முக்கு திரும்பியதைப் போல உணர்வதாக என்னிடம் கூறினார். அதன் பிரதிபலிப்பாக, கடந்த போட்டியில் நீங்கள் கோலியின் அற்புதமான ஒரு சதத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தப் போட்டியில் அவர், மிகச் சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸை விளையாடினார். அவருடைய இந்த பேட்டிங் மூலம் அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கும், கோலி எச்சரிக்கை விடுத்துள்ளார்” என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் எப்படி தயாராகியுள்ளன?

”இறுதிப்போட்டியைப் பொறுத்தவரையில், ’இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டிங் Vs ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சு’ மோதலாகத்தான் இருக்கப்போகிறது. இந்திய அணியை பொறுத்தவரையில் முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் கே.எல்.ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் விளையாடவில்லை. அதனால் இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் தான் முக்கியமான பொறுப்பை எடுக்கப்போகிறார்கள். அதில் விராட் கோலியின் பேட்டிங் என்பது, இந்திய அணிக்குப் பெரிய பலமாக இருக்கப்போகிறது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு விராட் கோலியின் விக்கெட் தான் பெரிய பரிசாக இருக்கப்போகிறது.

விராட் கோலி
விராட் கோலிடிவிட்டர்

ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லபுசனே இருவரும் இங்கிலாந்தில் விளையாடி வருவது, ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதேபோல ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சுக்கு மாற்றுவீரர்களாக, மைக்கேல் நெஸ்ஸர் மற்றும் சீன் அபோட் இருவரும் இங்கிலாந்தில் விளையாடி சிறப்பாகவே தயாராகியுள்ளார்கள். இதற்கிடையில் இந்திய வீரர்கள் ஐபிஎல் மட்டுமே ஆடுவதைப்போல தெரிந்தாலும், அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்காகவும் தயாராகவே இருக்கிறார்கள்” என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

இதனால்தான் வித்தியாசமான ஷாட் ஆடவில்லை!- ஐபிஎல் சதத்திற்குப் பிறகு விராட் கோலி

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த பிறகு பேசிய விராட் கோலியிடம், ”ஏன் நீங்கள் வித்தியாசமான ஷாட்களை ஆட முயற்சிக்கவில்லை” என்று கேட்கப்பட்டது.

விராட் கோலி
விராட் கோலிடிவிட்டர்

அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை ஃபேன்ஷி ஷாட்களை விளையாடுவதைவிட, எனது விக்கெட்டை கிஃப்ட் செய்யாமல் விளையாடுவதுதான் அவசியமாக இருக்கிறது. ஏனென்றால் ஐபிஎல்லுக்குப் பிறகு எங்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வருகிறது. டெஸ்ட் வடிவத்திற்கான நுட்பத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com