2023 ஐபிஎல்.. இப்போதே பேட்டிங் பயிற்சியைத் தொடங்கிய தோனி! வைரலாகும் வீடியோ

2023 ஐபிஎல்.. இப்போதே பேட்டிங் பயிற்சியைத் தொடங்கிய தோனி! வைரலாகும் வீடியோ
2023 ஐபிஎல்.. இப்போதே பேட்டிங் பயிற்சியைத் தொடங்கிய தோனி! வைரலாகும் வீடியோ

2023 ஐபில் தொடருக்காக முன்னாள் கேப்டன் தோனி, இப்போதே பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய ரசிகர்களால் ‘கூல் கேப்டன்’ என்றும் சென்னை ரசிகர்களால் ‘தல’ என்றும் அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர், இந்திய அணிக்கு தலைமை தாங்கிய பிறகு ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகிய மூன்று கோப்பைகளையும் வென்று தந்தார். அது, மட்டுமின்றி கிரிக்கெட்டிலும் எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டும் பங்கேற்று விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனி, அந்த அணிக்காக இதுவரை 4 முறை கோப்பைகளை வென்று தந்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் - ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், இதுவே தோனியின் கடைசி ஐபிஎல்லாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐபிஎல்லிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன், 5 முறையாக சென்னை அணிக்கு கோப்பையை வென்று தரும் நோக்கில் தோனி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2023 ஐபிஎல் போட்டியைக் கருத்தில் கொண்டு, அதற்கான பயிற்சியை தோனி இப்போதே தொடங்கிவிட்டார். ஜார்கண்ட்டில் உள்ள மைதானத்தில் அவர் பயிற்சியில் ஈடுபடும் தற்போது வைரலாகி வருகிறது. சென்னை அணிக்காக, 13 ஐபிஎல் தொடர்களில் பங்கேற்று விளையாடி வரும் தோனி, கடந்த மூன்று ஐபிஎல் தொடர்களில் பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

அவர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் 14 போட்டிகளில் 200 ரன்களும், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் 16 போட்டிகளில் 114 ரன்களும், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் 14 போட்டிகளில் 232 ரன்களும் எடுத்தார்.

ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி 4வது முறையாகச் சென்னை அணிக்கு கோப்பையை வென்று தந்தார். தற்போது மீண்டும் சென்னை அணிக்கு கோப்பையை வென்று தந்த மனநிறைவோடு ஐபிஎல்லில் இருந்து விடை பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதையடுத்தே, இப்போதிலிருந்தே பேட்டிங் பயிற்சியை தோனி தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com