“தேசியத்தின் பெயரால் காஷ்மீர் மக்கள் நசுக்கப்படுகிறார்கள்” - பிரியங்கா காந்தி

“தேசியத்தின் பெயரால் காஷ்மீர் மக்கள் நசுக்கப்படுகிறார்கள்” - பிரியங்கா காந்தி
“தேசியத்தின் பெயரால் காஷ்மீர் மக்கள் நசுக்கப்படுகிறார்கள்” - பிரியங்கா காந்தி

காஷ்மீரில் தேசியத்தின் பெயரால் லட்சக்கணக்கான மக்களின் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை சமீபத்தை மத்திய அரசு நீக்கியது. ஏராளமான பாதுபாப்பு படையினரை குவித்து, தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்து, 144 உத்தரவு பிறப்பித்து இந்த மாற்றத்தை அரசு மேற்கொண்டது. இருப்பினும், தொடர்ந்து காஷ்மீரில் சுதந்திரமான சூழல் இல்லை என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது. அதனையடுத்து, காஷ்மீரில் தற்போதைய நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று திருப்பி அனுப்பப்பட்டனர். 

இந்நிலையில், தேசியவாதத்தின் பெயரால் லட்சக்கணக்கான மக்களை மத்திய அரசு ஒடுக்குவதாக காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பிரியங்கா தன்னுடைய ட்விட்டரில், “இந்த நிலை இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும். தேசியத்தின் பெயரால் லட்சக்கணக்கான மக்களில் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீரில் ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டுள்ளது, அரசியல் செய்வது மற்றும் தேசவிரோத குற்றச்சாட்டை விட பெரியது இல்லை. இந்த விவகாரத்தில் குரல் எழுப்ப வேண்டியது ஒவ்வொருவருடைய கடைமை. நாங்கள் எங்களுடைய குரலை நிறுத்த மாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காஷ்மீரில் இருந்து டெல்லி திரும்பிய போது ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களிடம் பெண் ஒருவர் காஷ்மீரின் நிலையை கூறும் வீடியோவையும் ஷேர் செய்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com