Published : 21,Apr 2021 07:07 PM

நடிகர் விவேக் நினைவாக 'மாநாடு’ படப்பிடிப்பில் மரக்கன்றுகளை நட்ட சிலம்பரசன்

Actor-silambarasan-Planted-trees-in-Maanaadu-shooting-spot-in-memory-of-Vivek

நடிகர் விவேக் நினைவாக மாநாடு படக்குழுவுடன் இணைந்து மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் சிலம்பரசன்.

நடிகர் நடிகர் விவேக் மாரடைப்பால் கடந்த 17-ஆம் தேதி உயிரிழந்தார். அவர் மறைவிற்கு திரைத்துறையினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் சிந்தியது. காரணம், சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் சமூக சிந்தனையோடு செயல்பட்டு தமிழகம் முழுக்க 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றிக் கொண்டு வந்தார் நடிகர் விவேக்.

image

அவர், நினைவை போற்றும் விதமாக தமிழகம் முழுக்க இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகை ஆத்மிகா, அருண் விஜய், விவேக் நினைவாக மரக்கன்று நட்ட புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், நடிகர் சிம்பு இன்று ‘மாநாடு’ படக்குழுவுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

image

அவருடன், இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோரும் மரக்கன்றுகளை நட்டதோடு விவேக் புகைப்படத்திற்கு அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். 

image

விவேக் மறைந்த அன்று ”விவேக் சாருக்கு நான் அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்று வைக்க இருக்கின்றேன்” என்று நடிகர் சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்