[X] Close

கொரோனா முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்திற்கான காப்பீடு புதுப்பிப்பு!

இந்தியா

Govt-insurance-scheme-with-Rs-50-lakh-cover-for-Covid-healthcare-staffers-restored

கொரோனாவுக்கு எதிராக முன்களப் பணியாளர்களாக செயல்படும் சுகாதார பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்திற்கான காப்பீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் சுகாதாரப் பணியாளர்கள் முன்களத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் கொரோனா போர்வீரர்கள் என்றே (கொரோனா வாரியர்ஸ்) அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு கொரோனாவுடன் அன்றாடம் போராடி வரும் இவர்களும் அவ்வப்போது கொரோனா தாக்கி உயிரிழப்பை சந்திப்பது உண்டு. பலர் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டு வருகின்றனர்.

இப்படி கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்த பணியாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது. பிரதான் மந்திரி கரிப் கல்யான் தொகுப்பு எனப்படும் இந்த காப்பீடு திட்டத்தில் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது. 


Advertisement

image

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் 3 முறை நீட்டிக்கப்பட்டது. இதில் மூன்றாவது முறை நீட்டிக்கப்பட்ட இந்த காப்பீடு திட்டத்தின் கால அளவு வருகிற 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே 24-ம் தேதிக்குப் பிறகு புதிய காப்பீடு திட்டம் சுகாதார பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதற்காக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்துடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. 

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக முன்களப் பணியாளர்களாக செயல்படும் சுகாதார பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்திற்கான காப்பீடு நேற்று புதுப்பிக்கப்பட்டது.  சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தின் மூலம் இதுவரை 287 பேருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close