[X] Close

கிருஷ்ணகிரி: போலி கொரோனா சான்றிதழ் தயாரித்து அளித்த இளைஞர் கைது!

குற்றம்

Youth-arrested-for-producing-fake-corona-certificate

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் போலியாக கொரோனா நெகடிவ் சான்றிதழ் தயாரித்து வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

தினேஷ் என்ற அந்த இளைஞர் கடந்த 6 மாத காலமாக பேருந்து, ரயில், விமானம் ஆகியவற்றிற்கு டிக்கட் புக்கிங் செய்து வந்திருக்கிறார். வெளி மாநிலம் செல்வோர், வெளி நாடுகளுக்கு செல்வோருக்கு தினேஷ், போலியாக கொரோனா சான்றிதழ் வழங்கி வந்துள்ளார். பர்கூர் முதன்மை மருத்துவ அலுவலர் எழிலரசியின் பெயரில் இந்த சான்றிதழ்களை அவர் கொடுத்து வந்திருக்கிறார்.

image


Advertisement

இது குறித்து தெரிய வந்த எழிரலரசி அளித்த புகாரின் அடிப்படையில் தினேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சீல், கொரோனா போலி ஆவணங்களை கைப்பற்றப்பட்டன.


Advertisement

Advertisement
[X] Close