Published : 25,Jul 2017 10:12 AM

32 வருடம் ஆகியும் அசராத ஆக்‌ஷன் கிங்!

32-year-old-Action-King

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், வரலட்சுமி, பிரசன்னா, ஸ்ருதி ஹரிஹரன், வைபவ் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘நிபுணன்’. அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. சினிமாவுக்கு வந்து 32 வருடம் ஆனாலும் அதே துள்ளலோடும் உடற்கட்டோடும் அசத்தி வரும் அர்ஜூனுக்கு இது 150-வது படம். 

படம் பற்றி அர்ஜுன் கூறும்போது, ‘இதற்கு முன்பு பல முறை போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். அவை எல்லாவற்றிலும் இருந்து 'நிபுணன்' வித்தியாசமாக இருக்கும். இதன் திரைக்கதை சுவாரஸ்யமானது. இது வழக்கமான போலீஸ் திரில்லர் படம் இல்லை. வேறுபட்ட கோணத்தில் இதன் கதை சொல்லப்பட்டிருக்கிறது. நான் புலனாய்வு துறை டிஎஸ்பியாக நடித்துள்ளேன். உடலிலும் அறிவிலும் பலம் வாய்ந்த இந்த கேரக்டருக்கு எல்லோரையும் போல ஓர் பலவீனமும் இருப்பது திருப்பம். அருண் வைத்தியநாதன் திறமையாக படமாக்கியிருக்கிறார். அவருடன் பணி புரிந்தது அற்புதமான அனுபவம். இந்தப் படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும்’ என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்