[X] Close

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியா,கொரோனா வைரஸ்

Telangana-Chief-Minister-Chandra-sekhar-Rao-tests-positive-for-COVID-19

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் நாகர்ஜுனா சாகர் தொகுதி இடைத் தேர்தலுக்காக டிஆர்எஸ் வேட்பாளர் நோமுலா பகத்தை ஆதரித்து சமீபத்தில் சந்திரசேகர் ராவ் பிரச்சாரம் செய்தார்.

நோமுலா பகத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சந்திரசேகர் ராவும் பரிசோதனை செய்தார். அவருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவே, மேடக் மாவட்டத்தில் உள்ள எர்ரவள்ளியில் உள்ள பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். மருத்துவக்குழு அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close