Published : 25,Jul 2017 08:22 AM
இந்தியாவில் முதல்முறையாக ஆண்களுக்கான உலகக் குத்துச்சண்டைப் போட்டி

ஆண்களுக்கான உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டியை இந்தியா, முதல்முறையாக நடத்தவுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியை டெல்லியில் நடத்த சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டி, அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டி இந்தியாவில் நடக்க இருப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த 2006 ஆண்டு இந்தியாவில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.