[X] Close

மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?

ஐபிஎல் திருவிழா

Does-Virat-Kohli-led-Royal-Challengers-Bangalore-won-the-IPL-trophy-this-time-because-of-Maxwell-s-addition-and-three-consecutive-victory-of-the-first-three-league-matches-of-the-season

ஐபிஎல் கோப்பையை ஒருமுறையாவது வென்றுவிட வேண்டும் என்ற பெருங்கனவுடன் இருக்கும் அணிகளில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்று. ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்போடு அணியை A டு Z வீரர்களை மாற்றியும் ஏதோ ஒன்றை மிஸ் செய்து கடைசி நேரத்தில் கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. 2009, 2011 மற்றும் 2016 என மூன்று முறை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது தான் பெங்களூரு அணியின் சாதனை. 2010, 2015 மற்றும் 2020 சீசன்களில் பிளே ஆப் சுற்று வரை முன்னேறி இருப்பதும் அந்த அணியின் சாதனை. 


Advertisement

image

இந்த நிலையில் தான் நடப்பு சீசனில் கோப்பையை வெல்லும் கனவுடன் விளையாடி வருகிறது பெங்களூர் அணி. விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், சாம்பா, டேனியல் கிறிஸ்டயன், படிக்கல், மேக்ஸ்வெல், ஹர்ஷல் பட்டேல், ஜோசுவா பிலிப், கே. எஸ். பரத், கேன் ரிச்சர்ட்சன், ஜேமிசன், முகமது அசாருதீன், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, பவன் தேஷ்பாண்டே, ராஜாத் படிதார், சச்சின் பேபி, ஷபாஷ் அகமது, சூயஷ் பிரபு தேசாய், வாஷிங்டன் சுந்தர், சாஹல் என அமர்க்களமான டீமை அமைத்துள்ளது. குறிப்பாக பேட்டிங், பவுலிங் என அனைத்திற்கும் தீர்வு காண முனைந்துள்ளது. கடந்த சீசனில் படிக்கல், கோலி, டிவில்லியர்ஸ், சாஹல் தான் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்கள். ஆனால் இந்த முறை அதை எல்லோரிடமும் எதிர்பார்க்கும் வகையில் மடைமாற்றியுள்ளது அணி நிர்வாகம். 


Advertisement

image

அதில் நடப்பு சீசனில் பெங்களூர் அணியின் துருப்பு சீட்டு என்றால் அது மேக்ஸ்வெல் தான். முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 39 ரன்கள். இரண்டாவது போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக நெருக்கடியான நிலையில் 59 ரன்கள். மூன்றாவது போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 78 ரன்கள் என அணியின் வெற்றிக்கு அஸ்திவாரம் அமைத்து கொடுத்துள்ளார். வழக்கமாக பெங்களூர் அணி என்றால் கோலி, டிவில்லியர்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி நிச்சயம் என எதிர் அணிகள் கணக்கு போடும். ஆனால் இம்முறை கிரிக்கெட் உலகின் ‘பிக் ஷோ’ மேக்ஸ்வெல் பெங்களூர் அணி வெற்றிக்கு உதவி வருகிறார். கடந்த சீசன்களில் செய்த தவறுகளை சரி செய்து கொண்டு ஃபுட் வொர்கில் ஆரம்பித்து அனைத்திலும் மாற்றம் கொண்டு வந்துள்ளார் மேக்ஸ்வெல். அதற்கு அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் உதவி வருகிறார். 

அதன் காரணமாக பெங்களூர் அணி இந்த சீசனின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி ஆர்சிபி ரசிகர்களுக்கு ஏராளமான நம்பிக்கையை அள்ளிக் கொடுத்துள்ளது. ‘ஈ சாலா கப் நம்தே’ என்று இப்போதே அவர்கள் உற்சாக கோஷம் போட ஆரம்பித்துள்ளார்கள்.


Advertisement

image

“இன்னும் சில விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் எங்களின் பலம்” என கோலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. கோலி சொன்னது போல சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் பெங்களூர் அணிக்கு அனைத்தும் ஆள்-இஸ்-வெல்லாக அமைந்தால் பெங்களூர் இந்த முறை கப் வென்று விடும். 


Advertisement

Advertisement
[X] Close