
சாலையில் தாறுமாறாக ஒடிய லாரி விபத்தில் சிக்கிய காட்சியைப் பின்னால் காரில் வந்த ஒருவர் படம் பிடித்துள்ளார்.
தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தாறுமாறாக சென்றுகொண்டிருந்தது. இதனால் சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், சென்டர் மீடியனில் மோதி லாரி கவிழ்ந்தது. லாரியை பின் தொடர்ந்து காரில் வந்த நபர் இதனை படம்பிடித்துள்ளார்.