Published : 18,Apr 2021 09:24 PM

பேட்டிங்கில் மாஸ் காட்டிய பஞ்சாப்! டெல்லிக்கு 196 ரன்கள் இலக்கு!

DC-versus-PBKS-league-match-number-11-of-the-IPL-2021-Season-and-Punjab-Scored-195-runs-in-First-Innings-and-Delhi-need-to-chase-196-runs-in-20-overs

மும்பை - வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு இடையில் நடப்பு ஐபிஎல் சீசனின் பதினோராவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்திருந்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி இருபது ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை குவித்தது. 

அந்த அணிக்காக கேப்டன் கே. எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இன்னிங்ஸை ஓப்பன் செய்திருந்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 122 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். மயங்க் அகர்வால் 36 பந்துகளில் 69 ரன்களை குவித்து அவுட்டானார். கே. எல். ராகுலும் 51 பந்துகளில் 61 ரன்களை குவித்து வெளியேறினார். 

பஞ்சாப் அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தும் கெயில் 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பூரனும் 9 ரன்களில் அவுட்டானார். ஷாருக் கான், வோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார். 

டெல்லி அணிக்காக வோக்ஸ், மெரிவாளா, ரபாடா, ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இருபது ஓவர்களில் 196 ரன்களை குவிக்க வேண்டுமென்ற இலக்கை விரட்டுகிறது டெல்லி.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்