
கரூரில் காதலியை கழுத்தை நெறித்து கொன்று விட்டு காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கரூர் அருகேயுள்ள குட்டக்கடையைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா. திருவாரூர் மாவட்டம் பழையவலம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் போதிருந்து காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வினோத், சண்முகப்பிரியாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். வீட்டில் வேறு யாரும் இல்லாத நிலையில் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் சண்முகப்பிரியாவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அதே வீட்டில் வினோத்தும் தூக்கிட்டு இறந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த கரூர் காவல் துறையினர் இருவரின் உடலையும் கைபற்றி விசாரித்து வருகின்றனர்.